25.7 C
Jaffna
January 11, 2025
Pagetamil
கிழக்கு

கல்முனை பிராந்தியத்தில் ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகள் மூன்றாம் நாளுடன் முடிந்தன: விரைவில் மீள ஆரம்பிக்கும்!

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் கொவிட்-19 தடுப்பூசி நடவடிக்கைகளை கடந்த மூன்று தினங்களாக 4 நிலையங்களில் கிராம சேவகர் பிரிவு அடிப்படையில் மேற்கொண்டு வந்திருந்த நிலையில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலத்திற்கு கிடைக்கப்பெற்ற தடுப்பூசிகள் முடிவுற்றதாக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் அறிவித்துள்ளார்.

அவரது அறிவித்தலில்,

சாய்ந்தமருது 6ம், 13ம், 17ம் பிரிவுகளுக்கான மற்றும் தடுப்பூசிகள் பெற தவறியவர்களுக்கான தடுப்பூசி நடவடிக்கைகள் மிக விரைவில் வழங்கப்படும் என்பதுடன் அதற்கான கால அட்டவணைகளும் எமது அலுவலகத்தினால் வெளியிடப்பட்டு பொது மக்களாகிய உங்களுக்கு அறிவிக்கப்படும். ஆகவே தடுப்பூசி பெற தவறியவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் மிக அவசரமாக எதிர்வரும் தினங்களில் அறிவிக்கப்படும் என்பதுடன் தடுப்பூசிகளை பெறாதவர்கள் திகதி அறிவிக்கப்பட்டதுடன் பெற்றுக் கொள்ளுமாரும் கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கள் தொடக்கம் வியாழன் வரை 04 நாட்களுக்கு கிராம அலுவலர் ரீதியாக பிரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட தடுப்பூசி செலுத்தும் நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஒழுங்கமைக்கப்பட்டு ஏற்பாடாகி தடுப்பூசி செலுத்தும் பணி புதன் கிழமை வரை இடம்பெற்று வந்த நிலையில் ,கிடைக்கப் பெற்ற தடுப்பூசிகள் முடிவடைந்த நிலையில் கல்முனை தெற்கு பிரிவில் மறு அறிவித்தல் வரை தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறாது என்பதை பொது மக்களுக்கு அறியத்தருகிறேன் என சுகாதார வைத்திய அதிகாரி ஏ.ஆர்.எம்.அஸ்மி தெரிவித்துள்ளார் இதே போன்றே நிலையே கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிரிவிலுள்ள பல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களிலும் நிலவி வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு நற்பணியில் திருகோணமலை இளைஞர்கள்

east tamil

மட்டக்களப்பு கிரான்குளத்தில் இலவச இருதய மாற்று சிகிச்சைக் கூடம் திறப்பு

east tamil

ஆரையம்பதியில் கொடூர விபத்து: முச்சக்கர வண்டி-மோட்டர்சைக்கிள் மோதியல் இருவர் படுகாயம்

east tamil

பெண்மீது சினிமா பாணி தாக்குதல்: கோடீஸ்வரன் எம்.பி கொந்தளிப்பு

east tamil

கோட்டைக்கல்லாற்றில் அரிய மீன்பிடிப் பூனை இறந்த நிலையில் மீட்பு

east tamil

Leave a Comment