30.1 C
Jaffna
March 16, 2025
Pagetamil
இந்தியா

மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்: கைகளைப் பிடித்து சசிகலா ஆறுதல்

ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமியின் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி செலுத்தினார்.

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி, சென்னை பெருங்குடி தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் குணமடைந்து, இன்று (01) வீடு திரும்ப இருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதயநோய் நிபுணர்கள் அவசர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி காலை 6.45 மணிக்கு விஜயலட்சுமி உயிரிழந்தார்.

இறந்த விஜயலட்சுமியின் உடலுக்கு சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், உதயநிதி எம்எல்ஏ, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், முக்கியப் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், சசிகலாவும் மருத்துவமனைக்கு நேரில் சென்று விஜயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் உள்ளிட்டோருக்கு ஆறுதல் தெரிவித்தார். ஓபிஎஸ் கண் கலங்கியபோது, அவரது கைகளைப் பிடித்து சசிகலா ஆறுதல் தெரிவித்தார்.

விஜயலட்சுமியின் உடல் இன்று தேனி மாவட்டம் பெரியகுளத்திற்குக் கொண்டுவரப்பட்டு நாளை (02) அடக்கம் செய்யப்பட உள்ளது என்று அதிமுகவினர் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யூடியூப் பார்த்து தங்கம் கடத்த கற்றுக்கொண்டேன்: நடிகை ரன்யா ராவ் வாக்குமூலம்

Pagetamil

ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கை அமலாக்கத் துறை விசாரிக்கிறது: சிஐடி விசாரணையை திரும்ப பெற்ற கர்நாடக அரசு

Pagetamil

சீமான் வீட்டுக் காவலர், பணியாளருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்!

Pagetamil

நடிகை சவுந்தர்யா மரணத்தில் நடிகர் மோகன் பாபுவுக்கு தொடர்பா? – தெலங்கானா போலீஸ் நிலையத்தில் புகார்

Pagetamil

யூடியூப்பை பார்த்து ‘டயட்’டில் இருந்த இளம்பெண் உயிரிழப்பு!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!