கடந்த பத்தாண்டுகளில் தொழில்முறை கால்பந்து வீரர்களின் பரிமாற்றக் கட்டணத்திற்காக 48 பில்லியன் டொலருக்கும் அதிகமாக செலவிடப்பட்டதை
ஃபிஃபாவின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
விளையாட்டு நிர்வாக குழு 2011-2020 காலத்தில் ஆண்கள் கால்பந்து விளையாட்டில் சர்வதேச இடமாற்றங்களைக் கண்காணித்தது. இது உலகெங்கிலும் உள்ள இடமாற்றங்களின் மிக விரிவான மதிப்பாய்வாகும்.
2011 ஆண் ஆண்டில் 11,890 வீரர்கள் இடமாற்றங்கள் நடந்தன. இது படிப்படியாக அதிகரித்து 2019 இல் 18,079 வீரர்கள் பரிமாற்றத்துடன் உச்சமடைந்துள்ளது. இந்த காலப்பகுதியில் மொத்தம் 133,225 சர்வதேச இடமாற்றங்கள் மற்றும் தொழில்முறை வீரர்களின் கடன்கள் நடந்தன.
200 FIFA உறுப்பினர் சங்கங்களில் 66,789 வீரர்களும் 8,264 கிளப்புகளும் இடமாற்றத்தில் ஈடுபட்டனர்.
வெளிநாட்டு கிளப்புகளுக்கு இடம்மாற்றம் பெற்று செல்பவர்கள் பட்டியலில் பிரேசில் வீரர்களே முதலிடத்தில் உள்ளனர். அங்கிருந்து 15,128 வீரர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர். இரண்டாம் இடத்தில் அர்ஜென்டினா (7,444) உள்ளது. அடுத்த 3 இடங்களில் பிரிட்டிஷ் (5,523), பிரெஞ்சு (5,027) மற்றும் கொலம்பிய கால்பந்து வீரர்கள் (4,287) உள்ளனர்.
பரிமாற்றக் கட்டணச் செலவில் ஐரோப்பிய கிளப்புகள் முன்னணியில் உள்ளன.
கடந்த தசாப்தத்தில், சர்வதேச இடமாற்றங்களை நடத்தும் கிளப்புகளின் எண்ணிக்கை 30 சதவிகிதத்திற்கும் மேலாக வளர்ந்தது. இந்த எண்ணிக்கை 2011 இல் 3,167 இலிருந்து 2019 இல் 4,139 ஆக உயர்ந்தது. பரிமாற்றக் கட்டணச் செலவின் அடிப்படையில் முதல் 30 கிளப்புகளின் பட்டியலில் ஐரோப்பிய கிளப்புக்களே உள்ளன.
இங்கிலாந்து (12 கிளப்புகள்), ஸ்பெயின் மற்றும் இத்தாலி (தலா ஐந்து), ஜெர்மனி (மூன்று), பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல் (தலா இரண்டு) மற்றும் ரஷ்யா (ஒன்று).
பத்தாண்டுகளில் சர்வதேச இடமாற்றங்களில் முகவர்கள் கமிஷன்களுக்காக மொத்தம் $ 3.5 பில்லியன் செலுத்தப்பட்டது