ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி காலமானார்!

Date:

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 63.

ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி கடந்த இரு வாரங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சென்னை, பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று விஜயலட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய சகோதரர் ஓ.பாலமுருகன் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கடந்த மே மாதம் 14ஆம் திகதி காலமானார். இந்நிலையில் ஓபிஎஸ் மனைவி காலமானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜயலட்சுமியை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்