இலங்கையின் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,000 ஐ தாண்டியுள்ளது.
நாட்டில் மேலும் 194 கோவிட் தொடர்பான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இதுவரை பதிவான உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 9,185 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று (30) பதிவான இந்த உயிரிழப்புக்களில், 100 ஆண்களும் 94 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 3பேர்- 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண், 30 வயதிற்குட்பட்டவர்கள். 45 நபர்கள்- 31 ஆண்கள் மற்றும் 14 பெண்கள்- 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.
உயிரிழந்தவர்களில் 146 பேர்- 67 ஆண்கள் மற்றும் 79 பெண்கள்-60 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1