பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் இணைக்கப்பட்டிருந்த பொலிஸ் உதவி கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) ஒருவரின் மனைவி மற்றும் ஒரே மகன் கொரேனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
பொலிஸ் அதிகாரியின் உயிரிழந்த மகன் ஒரு சட்ட மாணவர் ஆவார். கொரோனா தொற்றுடன் கொத்தலாவல பாதுகாப்பு அறிவியல் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று (30) உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் அதிகாரியின் மனைவி கடந்தவாரம் உயிரிழந்தார்.
பொலிஸ் அதிகாரி தற்போது கோவிட் தொற்றுக்காக குண்டசாலை பொலிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1