சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இன்று எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்த 31 பேரிடம் இன்று அன்டிஜன் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இன்று சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பெருமளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். கைதடி அரச முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 45 பேரிடம் நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் 41 முதியவர்களிற்கு தொற்று உறுதியானது. அதுதவிர, இரண்டு உத்தியோகத்தர்களிற்கும் தொற்று உறுதியானது.