வவுனியாவில் ஆட்டுக் கொட்டகையின் சுவர் இடிந்து விழுந்ததில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது சிறுவன் மரணமடைந்துள்ளார்.
நேற்று (30) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பைமடுப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தந்தையார் தமது ஆடுகளை கொட்டகையில் கட்டிக் கொண்டிருந்த போது, சீமெந்து கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருந்த ஆட்டுக் கொட்டகையின் சுவருக்கருக்கில் ஒன்றரை வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
இதன்போது ஆடு வெருண்டு கொட்டகையின் சுவர்களை இடித்த போது, சுவர் இடிந்து ஒன்றரை வயது சிறுவனுக்கு மேல் விழுந்ததுள்ளது. இதனால் குறித்த சிறுவன் மரணமடைந்துள்ளார்.
சிறுவனை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் வைத்தியசாலைக்கு செல்வதற்கு முன்னரே சிறுவன் மரணமடைந்துள்ளதாக வைத்தியவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் வவுனியா, பம்பைமடுவைச் சேர்ந்த சுஜந்தன் கிருசன் என்ற ஒன்றரை வயது சிறுவனே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
இது தொடர்பில் பூவரசன்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.