அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில், 24 மணி நேர இடைவெளியில், புதிதாக 1,100 பேர் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டள்ளனர்.
டெல்டா வகை வைரஸ் தொற்றை முறியடிக்க எல்லா முயற்சிகளும் எடுக்கப்படும் வேளையில், அடுத்த சில வாரங்கள் மிக முக்கியமானவை என்று மாநில முதல்வர் கிளேடிஸ் பெரிஜிக்லியன் கூறினார்.
அங்கு, ஒக்டோபரில் தொற்று உச்சமடையலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
நியூ சவுத் வேல்ஸ் மாநில மக்கள் தொகையில் 65 வீதத்திற்கும் அதிகமானோர் ஒருமுறை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் சுமார் 7 மில்லியன் முறை தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன.
பெரியவர்களில் 80 வீதத்தினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு பொருளியல் நடவடிக்கைகளைத் தொடங்கலாம் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1