26.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள் விளையாட்டு

2020 டோக்கியோ பரா ஒலிம்பிக்கில் இலங்கைக்கு முதலாவது தங்கம்!

டோக்கியோவில் இடம்பெற்று வரும் 2020 பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை தனது முதலாவது தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளது.

F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத், உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

அவர் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்தார். அவரது தங்கப்பதக்கத்துடன், 2020 பரா ஒலிம்பிக்கில் இலங்கை 42வது இடத்திற்கு முன்னேறியது.

F46 ஈட்டி எறிதல் போட்டியில் வௌ்ளிப் பதக்கத்தையும், வெங்கலப் பதக்கத்தையும் இந்திய வீரர்கள் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2020 பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு இது முதல் பதக்கம்.

டோக்கியோ விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை குறைந்தது 45 நாடுகள் குறைந்தபட்சம் ஒரு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளன.

இதற்கிடையில், டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் 47 தங்கப் பதக்கங்கங்கள், 30 வெள்ளிப் பதக்கங்கள், 29 வெண்கலப் பதக்கங்கள் என 106 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தை பெற்றுள்ளது.

பெரிய பிரிட்டன் 24 தங்கம், 19 வெள்ளி மற்றும் 19 வெண்கலப் பதக்கங்களை பெற்று, இரண்டாவது இடத்தில் உள்ளது, அமெரிக்கா 15 தங்கப் பதக்கங்கள், 17 வெள்ளி மற்றும் ஒன்பது வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டிகளில் இதுவரை 75 நாடுகள் குறைந்தது ஒரு பதக்கத்தையாவது வென்றுள்ளன.

இதற்கிடையே இன்று பிற்பகலில், இலங்கையின் துலன் கொடித்துவக்கு மற்றும் சமிந்த சம்பத் ஹெட்டியாராச்சி ஆகியோர் ஆண்கள் ஈட்டி எறிதல் – எஃப் 64 இறுதிப் போட்டியில் பங்கேற்கின்றனர்.

ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு நிகழ்வு தொடங்கும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு

Pagetamil

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

சுனாமி 20 வது ஆண்டு: இன்று தேசிய பாதுகாப்பு தினம்!

Pagetamil

பறவை மோதியதால் விபரீதமா?: பயணிகள் விமானம் விபத்து; ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

ஜனாதிபதியாக இருந்தால்தான் கணவன்: சிரியாவிலிருந்து தப்பியோடிய ஆசாத்திடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி!

Pagetamil

Leave a Comment