நுகர்வோர் விவகார அதிகாரசபையில் பதிவு செய்யப்படாத, வத்தளை கெரவலப்பிட்டியில் உள்ள ஒரு களஞ்சியசாலையில் 4,096 மெட்ரிக் தொன் சீனி கண்டறியப்பட்டது. தற்போது அந்த களஞசியசாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
அந்த களஞ்சியசாலையில் பல மாதங்களாக சீனி சேமித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
சந்தையில் செயற்கை பற்றாக்குறையை உருவாக்கும் நோக்கத்துடன் இறக்குமதியாளர் சீனியை பதுக்கி வைத்ததாகவும், நுகர்வோருக்கு அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் தேவையற்ற இலாபத்தைப் பெற முயன்றதாகவும் வர்த்தக அமைச்சு கூறியது
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1