நுகர்வோர் விவகார அதிகாரசபை கடந்த ஒரு வாரத்தில் வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடத்திய சோதனையில் பதிவு செய்யப்படாத 52 நெல் களஞ்சியசாலைகள் அடையாளம் காணப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 8,000 மெட்ரிக் தொன் நெல் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கம்பஹா மற்றும் சீதுவ பகுதிகளில் உள்ள மூன்று களஞ்சிய சாலைகளில் 5,400 மெட்ரிக் தொன் சீனி அடையாளம் காணப்பட்டு, அவற்றிற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்துடன் விவாதித்து ஒரு வாரத்திற்குள் இந்த களஞ்சியசாலை உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படமென நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சட்டநடவடிக்கையின் போது குற்றவாளிகளாக கண்டறியப்பட்டவர்களுக்கு ரூ .1,000 முதல் 10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். ஒரே நிறுவனத்தின் பல களஞ்சியசாலைகள் கண்டறியப்பட்டால் ரூ .10,000 முதல் 100,000 வரையிலான தண்டம் மற்றும் ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படலாமென தெரிவிக்கப்பட்டள்ளது.