மட்டக்களப்பில் உயிரை மாய்த்துக் கொண்ட 13 வயதான சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கடந்த 27ஆம் திகதி தனது வீட்டில் சிறுமி உயிரை மாய்த்துக் கொண்டார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டு நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் சிறுமிக்கு தொற்று உறுதியானது.
கைத்தொலைபேசி தொடர்பாக வீட்டில் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து சிறுமி உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடம், நேற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சுகாதார விதிமுறைக்கு அமைய சடலம் தகனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
1
+1
+1
+1