இறக்காமம் வில்லு குள கிழக்கு கரைக்கு சொந்தமான நிலப் பகுதிகள் மிகவும் சூட்சுமமான முறையில் அடாத்தாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குளத்தின் உயர்மட்ட எல்லைப் பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளதோடு கோடை காலத்தில் குளத்தில் நீர் வற்றும்போது குளத்தின் நீர் தேங்கும் பகுதிகளுக்குள் உயரமான வரம்புகள் கட்டப்பட்டு குளத்தின் பகுதிகள் சுவீகரிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் பொது மக்கள் இறக்காமம் பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து பிரதேச சபையினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தவகையில் குறிப்பிட்ட எல்லைப் பகுதிகளுக்குள் எல்லாவிதமான விவசாய நடவடிக்கைகளுக்கும் பிரதேச சபையின் அனுமதி இன்றி செய்யக்கூடாது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த கட்டளையையும் மீறி செயற்பட்ட உழுவு இயந்திரங்கள் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.