சீனாவின் தயாரிப்பான சினோஃபார்ம் கோவிட் -19 தடுப்பூசியின் 2.3 மில்லியன் டோஸ்கள் இன்று இலங்கையை வந்தடைந்தன.
300,000 டோஸ் தடுப்பூசிகள், சீன மக்கள் விடுதலை இராணுவத்தால் இலங்கை இராணுவத்திற்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள இரண்டு மில்லியன் டோஸ்களும் இலங்கை அரசால் வாங்கப்பட்டது.
பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன மற்றும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும்அரசாங்க அதிகாரிகளும் விமான நிலையத்தில் பிரசன்னமாகி, சீன அன்பளிப்பை வரவேற்றனர்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL 869 விமானம் சீனாவின் பெய்ஜிங்கில் இருந்து புறப்பட்டு, இன்று அதிகாலை 5.20 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
சீனாவிலிருந்து இலங்கையால் பெறப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 18 மில்லியனாக அதிகரிக்கிறது. ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் ஏழு மில்லியன் டோஸ் சீனாவால் வழங்கப்பட்டது.
நேற்றைய நிலவரப்படி, 4,863,109 தனிநபர்களுக்கு இலங்கையில் சினோபார்ம் ஜப் மூலம் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.