வவுனியாவில் மேலும் 4 கொரோனா மரணங்கள்!

Date:

வவுனியாவில் கோவிட் தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் மூவர் நோய் தாக்கம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த மூவரும் கோவிட் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.

அத்துடன், வீட்டில் மரணமடைந்த ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் அவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி கோவிட் தொற்று காரணமாக வவுனியாவில் மேலும் நான்கு பேர் மரணமடைந்துள்ளனர்.

வவுனியா, வைரவபுளியங்குளம், தோணிக்கல், கனகராயன்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மரணமடைந்தவர்களாவர். சுகதாதார நடைமுறைகளைப் பின்பற்றி அவர்களது உடலை தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணைக்கு டிமிக்கி விடும் ஷிராந்தி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் பாரியாரான ஷிராந்தி ராஜபக்ஷ, நிதிக் குற்றப்...

முன்னாள் பிரதியமைச்சரின் மனைவி விளக்கமறியலில்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவியான லக்மந்தி ஹெட்டியாராச்சி, நீதிமன்ற...

22வது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது!

22 வது திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் விசேட பெரும்பான்மையுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்