சுமூகமாக தீர்வு கண்ட ஷங்கர் – வடிவேலு பிரச்சினை!

Date:

இயக்குனரும், தயாரிப்பாளருமான ஷங்கர் மற்றும் நடிகர் வடிவேலு இடையிலான பிரச்சினை சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கர், எஸ்.பிக்சர்ஸ் சார்பில், இம்சை அரசன் 23ம் புலிகேசி இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24ம் புலிகேசி என்ற பெயரில் தயாரித்தார். சிம்புதேவன் இயக்க, வடிவேலு நாயகனாக நடிக்க படம் உருவானது.

ஆனால் இடையில் இயக்குனருக்கும், வடிவேலுவுக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனால் பல கோடிகளை இழந்ததாக கூறிய ஷங்கர், தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலு மீது புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இப்பிரச்சினை முடியும் வரை வடிவேலுவால் புதுப்படங்களில் கமிட் ஆக முடியாமல் போனது.

தற்போது இப்பிரச்சினையை பேசி சுமூகமாக முடித்துள்ளனர். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தின் அறிக்கை: தமிழ் திரைப்படதயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள ஷங்கர், 23ம் புலிகேசி -2 படத்தில் நடித்த வடிவேலு மீது புகார் அளித்திருந்தார். மேற்படி புகார் சம்பந்தமாக வடிவேலு மற்றும் ஷங்கரிடம் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி, சுமூகமாக தீர்வு கண்டுள்ளனர். இதையடுத்து மீண்டும் இதன் படப்பிடிப்பு துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

spot_imgspot_img

More like this
Related

இந்தியாவின் 80வது சுதந்திரதினம்

இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில்...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ளுணர்வு நிரலாக்கல் (Vibe Coding) பயிற்சிப் பட்டறை

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் சமூக விஞ்ஞானங்கள்...

AUTO X- மோட்டார் வாகனக் கண்காட்சி 2026 யாழ்ப்பாணத்தில்!

வடக்கின் போக்குவரத்து மற்றும் வாகனத் துறையில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் நோக்கில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்