Pagetamil
இலங்கை

சீனி விலையை கட்டுப்படுத்த முடியாவிட்டால் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும்!

சீனி விலை உயர்வுக்கு முக்கியக் காரணம், அமைச்சர்களின் பொறுப்பற்ற கருத்துக்களே என நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே கூறுகையில், கடை உரிமையாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர்கள் கருத்து தெரிவிப்பதால், எதிர்காலத்தில் சீனியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என்றார்.

தற்போது ஒரு கிலோகிராம் சினியின் விலை ரூ .200 ஐ தாண்டியுள்ளது. ரூ.225-ரூ .240 க்கு விற்கப்படுகிறது. இது ஒரு துரதிருஷ்டவசமான நிலை. சீனி உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கம் வழங்கும் வரிச் சலுகைகளுக்கு மத்தியில் இத்தகைய விலை உயர்வு நடைபெறுகிறது என்றார்.

நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன விலை உயர்வு நியாயமற்றது என்றும் சில சட்ட குறைபாடுகளால் அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார்.

இதுபோன்ற கருத்துக்களால் நுகர்வோர் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், அமைச்சர்களின் இத்தகைய கருத்துக்கள் கடை உரிமையாளர்கள் மேலும் விலைகளை உயர்த்த வழி வகுக்கிறது என்றும் கூறினார்.

இந்த பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டால் இராஜாங்க அமைச்சரை தனது பதவியை காலி செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

வாயில் வந்தபடி ‘வெடிக்கிறார்களா’ ஜேவிபியினர்?

Pagetamil

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

Leave a Comment