25.7 C
Jaffna
December 28, 2024
Pagetamil
இந்தியா

2K ஹிட்ஸின் கண்ணை மறைத்த காதல்: நடு வீதியில் புரண்டு அழுத பெற்றோர்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பெற்ற தாய் தந்தையை தவிக்கவிட்டு காதலனுடன் சென்ற 18 வயது பள்ளி மாணவியை பிரிய மனமில்லாமல் , போலீஸ் வாகனத்தை மறித்து, தரையில் படுத்து பெற்றோர் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா தாண்டாகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பச்சியப்பன். இவரது மகள் பவதாரணி. பிளஸ் டூ முடித்துள்ள இவர் கடந்த 3 வருடங்களாக அதே பகுதியை சேர்ந்த மணி என்ற 25 வயது இளைஞரை காதலித்து வந்துள்ளார். தனக்கு 18 வயது பூர்த்தியானதை தொடர்ந்து பவதாரணி வீட்டை விட்டு வெளியேறி காதலன் மணியை திருமணம் செய்து கொண்டதாக கூறபடுகின்றது.

இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, செவ்வாய்கிழமை நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருவரும் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

காதல் ஜோடியை வியாழக்கிழமை போலீசார் நாமக்கல் மாவட்ட கூடுதல் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி விஜயன் இருவரிடமும் விசாரணை நடத்தினார். அப்போது மாணவி பவதாரணி , கணவர் மணியுடன் தான் செல்வேன் என கூறியதை தொடர்ந்து இருவரும் திருமண வயதை அடைந்து விட்டதால், சட்டப்படி அவர்கள் விருப்பப்படி செல்லலாம் என நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் இருவரையும் போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்ல முயற்பட்டனர். அப்போது அங்கு வந்த பவதாரணியின் தந்தை பச்சியப்பன், தாய் சிந்தாமணி ஆகிய இருவரும் தங்களது மகளை கீழே இறக்கி விட்டு செல்லுமாறு வாகனம் முன்பு படுத்து அழுது புரண்டு போராடினர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் வாகனத்தை மறித்து படுத்து போராட்டம் செய்த பவதாரணியின் தாயை மீட்டு பெண்காவலர்கள் அழைத்துச்சென்ற நிலையில், ஒரு வேளை அழுது அழைத்திருந்தால் தன் மகள் தன்னுடன் வந்து விட மாட்டாளா ? என்ற ஏக்கத்துடன் சின்னப்பையா வந்துடுரா ? என்று செல்லமாக அழுதபடியே அழைத்தது சோகத்தை உண்டாக்கியது

மறுபக்கம் போலீஸ் வாகனத்தின் முன்பக்க பம்பரை கட்டிப்பிடித்தபடி பச்சியப்பன் அழுது புரண்டு போராட்டம் நடத்திவந்தார்

இதற்கிடையே காதல்ஜோடியை மற்றொரு போலீஸ் வாகனத்தில் ஏற்றி, போலீசார் பாதுகாப்புடன் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். பின்னர் பவதாரணியின் பெற்றோரை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

18 வருடங்களாக வளர்த்து ஆசைப்பட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்த தனது பெற்றோரை உதறிவிட்டு காதலனுடன் செல்லும் அந்த மகளின் மனது கல் நெஞ்சமாக மாறிபோனதாக கூடியிருந்தவர்கள் கண் கலங்கியது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு

Pagetamil

நெரிசலில் உயிரிழந்த பெண் குடும்பத்தினருக்கு ‘புஷ்பா’ படக்குழு சார்பில் ரூ.2 கோடி நிதியுதவி

Pagetamil

“என்னை நானே சாட்டையால் அடித்துக் கொள்வேன், செருப்பு அணிய மாட்டேன்!” – அண்ணாமலை கொந்தளிப்பு

Pagetamil

தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல் சம்பவம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Pagetamil

3 கணவர்களிடமும் இயற்கைக்கு மாறான உறவு குற்றச்சாட்டு: பெண் கைது!

Pagetamil

Leave a Comment