நியூசிலந்தில் நடப்பில் உள்ள முடக்கநிலை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒக்லந்தில் முடக்கநிலை இன்னும் கூடுதலான நாள்களுக்கு நடப்பில் இருக்கும்.
நாட்டின் இதர பகுதிகளில் கட்டுப்பாடுகள் அடுத்த வாரத்திலிருந்து சற்றுத் தளர்த்தப்படக்கூடும் என்று நியூசிலந்துப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கூறினார்.
உணவகங்களிலும் மதுக்கூடங்களிலும் உணவை வாங்கி மட்டும் செல்லமுடியும். பொது இடங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். திருமணங்களிலும் இறுதிச் சடங்குகளிலும் அதிகபட்சம் 10 பேர் மட்டும் கலந்துகொள்ள முடியும்.
நியூசிலந்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒக்லந்தில் உள்ளூர் அளவில் 70 பேரிடம் தொற்று உறுதியானது.
டெல்ட்டா தொற்றால் நாட்டில் இதுவரை சுமார் 350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1