மன்னார் உயிலங்குளத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய் ஆனைக்கோட்டை கூழாவடி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்தியாம்பிள்ளை மலர்மார்கிறேட் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
காலன் உம்மைப் பறித்தெடுத்து முப்பத்தொரு நாட்கள் முடிந்ததம்மா
உருக்குலைந்து போனார்களம்மா உமது பிள்ளைகள்
உள்ளமே உடைந்து போய் உமது முகம் தேரும் மருமக்கள்
மனக்கவலையோடு உமது நேசப்புன்னகைக்காக காத்திருக்கும் பேரப்பிள்ளைகள்
கண்ணீரோடு கல்லறையில் கதறும் உங்களது பூட்டப்பிள்ளைகள்
உலகமே இருண்டு போனதம்மா
உறவுகள் உம் பெயர் சொல்லி வாடுதம்மா
நாம் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர் துளியின் வழியிலும்
உங்களைக் கண்டிட முடியாதோ அம்மா
எங்களை விட்டு வவாநீங்கள் பிரிந்தாலும் என்றோ
ஒரு நாள் எங்களது அழகையா குடும்பத்துக்குள்
குட்டி வவா வாய் திரும்பி வருவீர்கள் என்று
எமக்குள் ஆறுதல் அடைகின்றோம்
அன்னையின் 31ம் நாள் நினைவஞ்சலித் திருப்பலி தூய ஆரோக்கிய மாதா ஆலயம் ரொறன்ரோ 28-08-2021 சனிக்கிழமை அன்று மாலை 06:00 மணியளவில் ஒப்புக்கொடுக்கின்றோம் உற்றார், உறவினர், நண்பர்கள் கலந்து மன்றாடும் படி அன்போடு அழைக்கின்றோம்.