நியூசிலாந்து முடக்க நிலை நீடிக்கப்பட்டுள்ளது!

Date:

நியூசிலந்தில் நடப்பில் உள்ள முடக்கநிலை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒக்லந்தில் முடக்கநிலை இன்னும் கூடுதலான நாள்களுக்கு நடப்பில் இருக்கும்.

நாட்டின் இதர பகுதிகளில் கட்டுப்பாடுகள் அடுத்த வாரத்திலிருந்து சற்றுத் தளர்த்தப்படக்கூடும் என்று நியூசிலந்துப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்  கூறினார்.

உணவகங்களிலும் மதுக்கூடங்களிலும் உணவை வாங்கி மட்டும் செல்லமுடியும்.  பொது இடங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். திருமணங்களிலும் இறுதிச் சடங்குகளிலும் அதிகபட்சம் 10 பேர் மட்டும் கலந்துகொள்ள முடியும்.

நியூசிலந்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒக்லந்தில் உள்ளூர் அளவில் 70 பேரிடம் தொற்று உறுதியானது.

டெல்ட்டா தொற்றால் நாட்டில் இதுவரை சுமார் 350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

திருடச் சென்ற வீட்டில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்

ரத்தனபிட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த திருடன் ஒருவன், உள்ளே...

ஹோர்முஸைத் திறக்கும் திட்டம் குறித்து அமெரிக்காவின் பதில் செவ்வாய்க்கிழமை வரும் – ஈரான் வெளியுறவு அமைச்சர்

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது குறித்த தெஹ்ரானின் முன்மொழிவுக்கு, அமெரிக்காவிடமிருந்து செவ்வாய்க்கிழமையன்று அதிகாரப்பூர்வமான...

அரச வாகனத்தை பயன்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பௌசிக்கு ரூ.66 இலட்சம் அபராதம்!

அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், நெதர்லாந்து அரசாங்கத்தால் அனர்த்த முகாமைத்துவ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்