Pagetamil
இலங்கை

மன்னாரில் மூத்த பிரஜைகளுக்கு வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை

இவ் வாரம் தேசிய தடுப்பூசி வாரமாக பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் நீண்ட கால சுகயீனமுற்ற முதியவர்கள் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட மூத்த பிரஜைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று(26) வியாழக்கிழமை மன்னார் மாவட்டம் முழுவதும் இடம் பெற்று வருகின்றது.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை இணைந்து குறித்த தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மன்னார் நகர், முசலி, நானாட்டான், மடு, மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் முன்பதிவு மேற்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த பிரஜைகளுக்கு அஸ்ராசெனிக்கா தடுப்பூசிகளின் முதல் தடுப்பூசி இன்றைய தினம் வீடுகளுக்குச் சென்று வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இவ்வாரம் முழுவதும் மூத்த பிரஜைகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம் பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய வானிலை

Pagetamil

அடையாள அட்டையின்றி பக்கத்து கடைக்கு சென்றவரை கைது செய்த பொலிசார் இடமாற்றம்!

Pagetamil

தண்டவாளத்தில் செல்பி எடுத்த தாயும், மகளும் ரயில் மோதி பலி

Pagetamil

நாளை முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை

Pagetamil

பிரித்தானியர் ஒருவரால் வந்த வினை: இலங்கையில் பேராபத்தாக உருவெடுத்துள்ள ஆபிரிக்க நத்தைகள்!

Pagetamil

Leave a Comment