இலங்கையில் கொரோனா வைரஸூக்கு எதிரான இரண்டு தடுப்பூசிகளும் ஆறு மில்லியனுக்கும் அதிகமான நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்ட தரவின்படி, இதுவரை 6,121,540 பேர் கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர்.
நேற்று, 239,650 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியின் முதல் டோஸ் 6,332 பேருக்கு வழங்கப்பட்டது. 805 பேர் இரண்டாவது டோஸைப் பெற்றனர்.
15,548 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸும், 93,434 பேருக்கு இரண்டாவது சினோஃபார்ம் டோஸும் வழங்கப்பட்டது.
48,320 பேர் ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸையும், 196 பேர் இரண்டாவது ஃபைசர் டோஸையும் பெற்றனர்.
15 பேருக்கு மொடர்னா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டது. 73,308 பேர் இரண்டாவது டோஸைப் பெற்றனர்.
ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் இரண்டாவது டோஸை நேற்று 1,692 பேர் பெற்றனர்.