25.8 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

2000 ரூபா கொடுப்பனவிலும் மூக்கை நுழைத்த அங்கஜன் குழு: சுன்னாகத்தில் குழப்பம்!

கொரோனா தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்தவர்களிற்கு வழங்கப்படும் 2,000 ரூபா கொடுப்பனவிலும் அங்கஜன் இராமநாதனின் குழுவினர் எனக்கூறிக்கொண்டு நுழைந்த குழுவொன்று “அளப்பறையில்“ ஈடுபட்டதால் பணம் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்ட சம்பவம் இன்று நடந்தது.

சுன்னாகம் நகர் தெற்கு கிராமசேவகர் பிரிவில் இன்று காலை இந்த சம்பவம் நடந்தது.

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் அனைத்தையும் தமது பரிந்துரைகளை போலவும், நிகழ்வுகளில் தம்மை முன்னிலைப்படுத்தியும் அங்கஜன் இராமநாதன் அணியினர் அண்மைக்காலமாக செய்யும் அளப்பறைகள் அளவு கணக்கில்லாமல் நீண்டு வருகிறது.

யாழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்திய வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவிலும் இந்த அரசியல் தலையீடு காரணமாக பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இந்த நிலையில், சுன்னாகம் நகர் தெற்கு கிராமசேவகர் பிரிவில் இன்று வாழ்வாதாரம் இழந்தவர்களிற்கான 2,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது. கிராம சேவகர் உள்ளிட்ட 3 அலுவலர்கள் இந்த பணியில் ஈடுபட்டிருந்த போது, பிரதேசத்தின் அங்கஜன் தரப்பின் இணைப்பாளர், பிரதேசசபையின் நியமனப்பட்டியல் உறுப்பினர், அஇஅ (அங்கஜன் இராமநாதன் அலுவலர்) உள்ளிட்ட குழு புகுந்து, நிகழ்வில் தமக்கும் முன்வரிசை கதிரை போட வேண்டும், தமது முன்னிலையில் பணம் வழங்க வேண்டுமென “சில்லறை அரசியல்“ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

எனினும், கிராமசேவகர் இந்த நடவடிக்கைகளிற்கு இடமளிக்கவில்லை.

தாம் ஒருங்கிணைப்பு தலைவரின் பிரதிநிதிகள் என வந்தவர்கள் தெரிவித்த போதும், அரச சுற்றறிக்கைகளில் அப்படியான ஏற்பாடுகள் எதுவுமில்லாததை கிராம சேவகர் சுட்டிக்காட்டி அந்த குழுவின் அரசியல் நடவடிக்கைக்கு இடமளிக்கவில்லை.

தமது அரசியல் நடவடிக்கைக்கு இடமளிக்கவில்லையென்ற ஆத்திரத்தில் வந்த குழுவினர், கிராம சேவகருடன் கடுமையான தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, 2,000 ரூபா பணம் வழங்கும் நடவடிக்கையை இடைநிறுத்திவிட்டு கிராமசேவகர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

அங்கஜனின் அலுவலர்கள் எனக் கூறிக்கொண்டு வந்தவர்கள், வழித் தேங்காயை எடுத்து தெருப்பிள்ளையாருக்கு அடிக்கும்அரசியல் செய்ய முயன்றதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களிற்கு இன்று காலையில் கிடைக்க வேண்டிய 2,000 ரூபா பணம் கிடைக்கவில்லை. அது பின்னர் வழங்கப்படும்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரணிலை திருடன் என்ற நீதியமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்: ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல்

Pagetamil

யாழில் சங்கிலி அறுத்தவர் கைது!

Pagetamil

யாழில் புள்ளிங்கோக்களை மாணவர்களாக மாற்றிய அதிபர்

Pagetamil

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள் – 20 பேர் இந்தியா பயணம்

Pagetamil

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

Leave a Comment