மககளை வீடுகளுக்கு உள்ளே வைத்து அல்ல, வீடுகளுக்கு வெளியே வைத்தே அரசாங்கம் நாட்டை முடக்கியுள்ளனர் என அரசு மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
கொழும்பில், நேற்று (25) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
கோவிட் -19 தொற்றை கண்டறி அறிவியல் ரீதியாக முன்னெடுக்கப்பட்ட சோதனைகளை அதிகரிக்குமாறு கோரினால், தற்போது சோதனைகளை குறைத்துவிட்டனர். சோதனைக்கு மாதிரிகள் எடுக்க வழி இல்லாததால் சோதனைகள் குறைக்கப்படுகின்றன என
கொவிட்-19 செயலணியின் பிரதானியான இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா
தெரிவித்துள்ளார். இது யானையை வைத்துக்கொண்டு, அங்குசம் இல்லாமையால், அவ்வேலையை கைவிடுவதாக கூறுவதைப் போலுள்ளது.
சுகாதார அமைச்சின் வழிகாட்டல்கள் போலியாகியுள்ளது. அந்த அமைச்சின் ஊடாக
பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கான ஓர் ஏகபோகத்தை உருவாக்கியுள்ளனர்.
முக்கிய சாலைகளை கண்காணிக்கும்போது, அதிகமான மக்கள் வெளியில் இருப்பதும் வழக்கம் போல் தங்கள் வேலையை மேற்கொள்வதும் தெளிவாகிறது.
அடிப்படை தரவை பகுப்பாய்வு செய்வதன் மூலம், கொரோனா வைரஸ் பரவல் பாதையின் தெளிவான படம் உள்ளது. எனவே பரவலைத் தடுக்க பூட்டுதலைக் கோரினோம்.
அதிகாரிகளால் வெளியிடப்பட்ட முரண்பட்ட தரவுகளுடன் கூட, வைரஸ் நாடு முழுவதும் அதன் சொந்த பாதையை எடுத்துள்ளதை எந்தவொரு நிபுணரும் புரிந்து கொள்ள முடியும். எனவே மக்கள் மேலும் வைரஸுக்கு ஆளாகாமல் தடுப்பது மிகவும் முக்கியம்.
தொற்று மற்றும் இறப்பு விகிதங்கள் குறையவில்லை என்பதற்கு கடந்த சில நாட்களின் தரவு மற்றொரு தெளிவான படத்தை அளித்துள்ளது.
அரசாங்கம் தனிமைப்படுத்தல் மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை முறையாக அமல்படுத்தாததால், எதிர்காலத்தில் தொற்றுநோய்களின் எண்ணிக்கை அவ்வப்போது அதிகரிக்கும் போது, நாடு பூட்டப்பட்ட நிலையில் வைக்கப்பட வேண்டியிருக்கும்.
வைரஸின் சங்கிலியை உடைக்க குறைந்தது 10 நாட்கள் தேவைப்படும். பெரும்பான்மையான பொதுமக்கள் வீட்டுக்குள் இருந்தால் மட்டுமே அதை அடைய முடியும் என்றார்.