சிறுதானியங்களில் பல்வேறு ருசியான சத்தான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் சிறுதானிய வெஜ் நூடில்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிறுதானிய சத்து மாவு – ஒரு கப்,
விரும்பிய காய்கறி கலவை (கேரட், பீன்ஸ், பட்டாணி) – ஒரு கப்,
வெங்காயம் – ஒன்று,
பச்சை மிளகாய் – 2
தக்காளி சாஸ் – ஒரு டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி தழை -சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவைக்கு.
செய்முறை:
காய்கறிகள், வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெறும் வாணலியில் சிறுதானிய சத்துமாவை வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும். பின்னர் இதனுடன் உப்பு, சூடான தண்ணீர் விட்டு இடியப்ப மாவு பதத்துக்கு பிசையவும். மாவை இடியப்ப அச்சில் போட்டு பிழிந்து ஆவியில் வேக விட்டு எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு, தக்காளி சாஸ், வேக வைத்த நூடுல்ஸ் சேர்த்து கிளறவும். மசாலா எல்லாம் நூடுல்ஸ் உடன் சேர்ந்ததும் கொத்தமல்லிதழை தூவி இறக்கி பரிமாறவும். சூப்பரான சிறுதானிய வெஜ் நூடில்ஸ் ரெடி.