25.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
லைவ் ஸ்டைல்

தொப்பை குறைய வேண்டுமா? இதோ டிப்ஸ்!

மூச்சை உள் இழுக்கும் போதும், வெளியே விடும் போதும் கவனத்தை மூச்சுப்பயிற்சியில் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்பது மட்டும் தான் இந்த பயிற்சியின் அடிப்படை. தினமும் தொடர்ந்து செய்யும் போது ஒரே மாதத்தில் உடல் ஒழுங்கு நிலைக்கு வந்திருக்கும். எதிலும் அவசரம் அவசரம் என்று ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்கள் எல்லாவற்றையும் குறிப்பாக சிக்கலான சூழலையும் பதட்டமில்லாமல் கையாள்வார்கள். நுரையீரலுக்கு காற்று தடையின்றி செல்வதால் சைனஸ், ஆஸ்துமா பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் நிவாரணம் அடைவார்கள்.

நீரிழிவு, மலச்சிக்கல், இரத்த அழுத்தப் பிரச்சினைகளை வராமல் காப்பதிலும், வந்தவர்கள் செய்யும் போது கட்டுப்படுத்துவதிலும் இந்த பிராணாயாம பயிற்சி உறுதுணையாக இருக்கும். உற்சாகம் குறைந்திருக்கும் போது எந்த நேரமாக இருந்தாலும் சோர்வை உடனே விரட்டியடிக்க மூச்சை மெதுவாக உள்ளிழுத்து நிறுத்தி பொறுமையாக வெளிவிடுங்கள். ஐந்துநிமிடங்களில் உற்சாகமாய் உணர்வீர்கள். உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சியைக் காட்டிலும் சிறந்தது யோகா என்கிறார்கள் நிபுணர்கள். உடல் தசைகளை அடக்கி ஆள யோகா துணைபுரிகிறது, உடலை வருத்தும் உடற்பயிற்சிகளுக்கு முன்னால் எளிமையான மூச்சுப்பயிற்சியால் செய்யும் இந்த பிராணாயாம பயிற்சி உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உங்களை எப்போதும் ஃபிட்டாக வைத்திருக்கும்.

உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி உடலை பரிசுத்தமாக்கி வைத்திருப்பதால் உடல் பொலிவுடன் இருக்கும். நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். செரிமானம் எளிதாகும். உணவின் தேவை கூடினாலும் உடல் எடை கட்டுக்கோப்புடன் இருப்பதை உறுதி செய்கிறது மூச்சுப்பயிற்சி என்னும் பிராணாயாமம். அனுபவமிக்க பயிற்சியாளரின் ஆலோசனையோடு மூச்சு பயிற்சியைத் தொடங்குங்கள். ஆயுளுக்கும் கட்டுக்கோப்பாய் அழகாய் ஜொலிப்பீர்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment