Pagetamil
சினிமா

மீண்டும் திருமணம் செய்த பிரகாஷ் ராஜ்!

தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கிய டூயட் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் பிரகாஷ் ராஜ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்பட பல மொழிகளில் நடித்து வருகிறார். நடிகை லலிதா குமாரியை 1994 இல் திருமணம் செய்து கொண்டார் பிரகாஷ் ராஜ். இவர்களின் திருமண வாழ்க்கை 2009 இல் முடிவுக்கு வந்தது.

பிரகாஷ் ராயும், லலிதா குமாரியும் பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து செய்து கொண்டபின் 2010 இல் போனி வர்மாவை பிரகாஷ்ராஜ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இன்று அவர்களின் 11 ஆம் ஆண்டு திருமண நாள். இதனை முன்னிட்டு மனைவிக்கு நன்றி தெரிவித்து இருந்தார்.

தற்போது தனது மனைவியை மீண்டும் திருமணம் செய்து கொண்டார். இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில், இன்றிரவு நாங்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டோம். என் மகன் வேதந்த் எங்கள் திருமணத்தை பார்க்க விரும்பியதால் அவன் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது என்று பிரகாஷ் ராஜ் பதிவு செய்து இருக்கிறார்.

இதையும் படியுங்கள்

முந்தைய அஜித் படங்களின் வசூலை முறியடிக்குமா ‘குட் பேட் அக்லி’?

Pagetamil

ஒரு பாடலுக்கு மீண்டும் நடனமாடும் தமன்னா!

Pagetamil

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் – இது ‘ஹாலிவுட்’ லெவல்!

Pagetamil

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சாதனையை முறியடித்த ‘எம்புரான்’!

Pagetamil

குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்ய கோரி ஹன்சிகா மனு

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!