விஜய் டிவியின் பிக் பாஸ் நான்காம் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் பாலாஜி முருகதாஸ். மாடலின் துறையில் இருந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சர்ச்சையான பல விஷயங்களை செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். எனினும் அவர் இரண்டாம் இடம் பிடித்தார். ஆரம்பத்தில் இருந்தே பாலாஜி முருகதாஸ் ஆரி உடன் சண்டை போட்டாலும் இறுதியில் அவருடன் சமரசம் ஆகி விட்டார்.
பிக் பாஸுக்கு பிறகு தற்போது சினிமா வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார் பாலாஜி முருகதாஸ். அவர் தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிரமைல் உரையாடினார். அப்போது ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
சமீபத்தில் ஒரு ரசிகர் ‘உங்களுக்கு எப்போது திருமணம்?’ எனகெட்டுவிட்டார். அதற்கு பதில் சொல்ல பாலாஜி “எல்லோரும் இதே கேள்வியை கேட்கிறார்கள். நான் இப்போ தான் காலேஜ் முடிச்ச பீலிங்ல இருக்கேன். இன்னும் பல வருடங்களுக்கு
திருமணம் பற்றி யோசிக்கப் போவதில்லை” என பாலாஜி கூறுகிறார்.
இப்படி ஒரு பதிலை கேட்டு அவரது ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர். பாலாஜிக்கு தற்போது 25 வயதாகிறது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் 18 வயதில் இருந்தே பாடி பில்டிங்கில் வேலை வருவதாகக் கூறுகிறார்.
அவர் ஷிவானி நாராயணனை காதலித்து வருவதாக கிசுகிசு வந்துகொண்டிருந்த நிலையில் பாலாஜி அவருக்கு சமீபத்தில் ரக்ஷா பந்தன் வாழ்த்து கூறி உள்ளார். அண்ணன் தங்கையாக மாறிவிட்டார்களோ எனநெட்டிசன்கள் அதை பார்த்து கேட்கின்றனர் .