பிக்பாஸ் 5ஆம் சீசன் எப்போது தொடங்கும் என்று தான் ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களும் தற்போது வெயிட்டிங். அவர்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் விதமாக பிக் பாஸ் 5 பற்றிய அப்டேட் இந்த வாரம் வெளிவரும் என எதிர்பார்க்கப்டுகிறது. ஐந்தாம் சீசனுக்காக வழக்கம் போல இவிபி ஸ்டூடியோவில் ஒரு பிரம்மாண்ட வீடு செட் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் பணிகளும் தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன் நேற்று பிக்பாஸ் இல் சில ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். அதனால் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வெள்ளிக்கிழமை மாலை வெளிவரும் என தகவல் பரவி வருகிறது. மேலும் பிக்பாஸ் 5 ஷோ அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என தெரிகிறது. இருப்பினும் அது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகும். மறுபுறம் போட்டியாளர்களாக யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மனதில் இருக்கிறது. ஜிபி முத்து, குக் வித் கோமாளி கனி உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்கள் பிக் பாஸ் 5 போட்டியாளர்கள் உத்தேச பட்டியலில் இருப்பதாக செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.