கொரோனா பரவல் காரணமாக நுரையீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவு பொருட்களை தேடிப்பிடித்து சாப்பிடுவதற்கு பலரும் ஆர்வம் காட்டும் நிலையில், இந்த உணவுகளை ஏன் அவசியம் சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம். கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, வேறொரு விதத்தில் இது உடல்நலத்திற்கு நன்மை சேர்த்துள்ளது. காற்று மாசுபாடு பெரும் அச்சுறுத்தலாக மாறி வரும் நிலையில் முகக் கவசம் அணிவதன் மூலம் நுரையீரல் சார்ந்த நோய் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.
ஏனெனில் மற்ற உள்ளுறுப்புகளை போல் அல்லாமல் சுற்றுச்சூழலுடன் தொடர்பு கொள்ளும் சில உறுப்புகளில் நுரையீரல் முதன்மையானது. காற்றில் கலந்திருக்கும் தூசுக்கள் நுரையீரல் அறைகளில் இருக்கும் ஆயிரக்கணக்கான செல்களை சேதப்படுத்தக்கூடும். அதன் விளைவாக நோய்த்தொற்று, ஒவ்வாமை பாதிப்புக்கு ஆளாக நேரிடும். கொரோனா பரவல் காரணமாக நுரையீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவு பொருட்களை தேடிப் பிடித்து சாப்பிடுவதற்கு பலரும் ஆர்வம் காட்டும் நிலையில், இந்த 10 சூப்பர் உணவுகளை ஏன் அவசியம் சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம்.
1. தக்காளி
தக்காளியில் லைகோபீன் நிறைந்துள்ளது. மேலும் இதிலிருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள், காற்றுப் பாதைகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கக்கூடியது. மற்றும் ஆஸ்துமாவை தடுக்கவும் உதவும். தினமும் ஏதாவதொரு வகையில் சமையலில் தக்காளியை சேர்த்துக்கொள்வது நல்லது.
2. கிரீன் டீ
கிரீன் டீ நுரையீரலின் தசைகளை இலகுவாக்கி வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் தினமும் இரண்டு கப் கிரீன் டீ பருகுவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
3. அக்ரூட் பருப்புகள்
அக்ரூட் பருப்புகள் நுரையீரலில் இருக்கும் காற்று பைகள் சுருங்காமல் இயல்பான அளவை தக்கவைத்துக்கொள்வதற்கு உதவக்கூடியது. மேலும் இதிலிருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் தசைகளுக்கு வலிமை அளிக்கக்கூடியது. பொதுவாக முதியவர்கள் சுவாச பிரச்சினையை எதிர்கொள்வார்கள். அவர்கள் ஒரு கைப்பிடி அளவு அக்ரூட் பருப்புகள் சாப்பிட்டு வருவது நல்ல பலனை கொடுக்கும்.
4. ஆப்ரிகாட்
ஆப்ரிகாட் பழத்தில் அதிக அளவு விற்றமின் ஏ உள்ளது. இது சுவாச குழாய்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும். அதனை பராமரிக்கவும் துணைபுரியும். நோய்த்தொற்று அபாயத்தையும் குறைக்கும். இந்த பழத்தை அப்படியே மென்று ருசிக்கலாம். உலர் பழங்களாகவும் சாப்பிடலாம்.
5. பூண்டு
தினமும் பூண்டு சாப்பிடுவது நல்லது. அதன் மூலம் நுரையீரலுக்கு போதுமான அளவு அல்லிசின் கிடைக்கும். இது நுரையீரலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பக்டீரியா நோய்த்தொற்றுகளை குறைக்கும். பூண்டுவை அப்படியே சாப்பிடலாம். உலரவைத்தும், நெருப்பில் சுட்டும் உட்கொள்ளலாம். ஊறுகாய் தயாரித்தும் ருசிக்கலாம். ஆனால் அதிகம் பூண்டு சாப்பிடுவது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும் என்பதால் மிதமான அளவில் உட்கொள்ள வேண்டும்.