27 C
Jaffna
December 19, 2024
Pagetamil
இலங்கை

21 நாள்… 3 வயது குழந்தைகள்… 3 சகோதரிகள்: வடக்கின் இன்றைய பிசிஆர் சோதனை முடிவுகள்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (24) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் வடக்கில் 98 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் இன்று 460 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டது.

இதில், யாழ் மாவட்டத்தில்- சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர், சங்கானை மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், யாழ் போதனா வைத்தியசாலையில் 14 பேர் (அதில் குருநகர் பகுதியை சேர்ந்த உயிரிழந்த 91 வயதான மூதாட்டியும், குருநகரில் வாள்வெட்டு குழு தாக்குதலில் உயிரிழந்த 24 வயது இளைஞனும் உள்ளடங்குகின்றனர்), பண்டத்தரிப்பு  மாவட்ட வைத்தியசாலையில் 3 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 2 பேர், யாழ் மாநகரசைபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 4 பேர் (தாய், 4 வயது மகள் உள்ளடங்கலாக), சாவகச்சேரி பொதுவைத்தியசாலையில் 2 பேர் என 33 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

வவுனியா மாவட்டத்தில்- வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், வவுனியா பொது வைத்தியசாலையில் 5 பேர் (21 நாள் குழந்தையும், உயிரிழந்த 28 வயது இளைஞனும் உள்ளடக்கம்), மாமடுவ மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் ஒருவர் என 9 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில்-மாந்தை கிழக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர், மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் ஒருவர், புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் ஒருவர், முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியாசாலையில் 3 பேர் என 8 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

கிளிநொச்சி மாவட்டத்தில்- பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 21 பேர் (தந்தை, 19, 17, 15 வயதான மகள்களும், பிறிதொரு 11 வயது சிறுவனும் உள்ளடக்கம்), கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் 4பேர், பளை மாவட்ட வைத்தியசாலையில் 12 பேர் என 37 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

மன்னார் மாவட்டத்தில்- மாவட்ட பொது வைத்தியசாலையில் 7 பேர் (19 வயது மாணவன் உள்ளடங்களாக) தொற்றிற்குள்ளாகினர்.

காங்கேசன்துறை கடற்படை முகாமில் 4 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

இதேவேளை, இன்று சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வந்த 30 நோயாளர்களிற்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் சோதனையில் 20 பேருக்கு தொற்று உறுதியானது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

எலிக்காய்ச்சலால் வளர்ப்பு மிருகங்களும் பாதிக்கப்படலாம்!

Pagetamil

முள்ளிவாய்க்காலில் 103 ரோஹிங்கியா அகதிகளுடன் கரையொதுங்கிய படகு!

east tamil

தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க புதிய தலைவர், செயலாளர் தெரிவு!

east tamil

விமானத்தில் பக்கத்திலிருந்த பெண்ணைப் பார்த்து உணர்ச்சி கொண்ட இலங்கையருக்கு நேர்ந்த கதி!

Pagetamil

மனைவியை கோடாரியால் வெட்டிக்கொன்ற இலங்கையருக்கு அவுஸ்திரேலியாவில் 37 வருட சிறை!

Pagetamil

Leave a Comment