சீனாவில் இருந்து இன்று காலை ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன.
பெய்ஜிங்கில் இருந்து தடுப்பூசிகளை ஏற்றி வந்த யுஎல் 869 சரக்கு விமானம் அதிகாலை 5.09 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
சீனாவினால் உற்பத்தி செய்யப்படும் சினோபார்ம் தடுப்பூசிகளில் மேலும் இரண்டு மில்லியன் தடுப்பூசிகள் இந்த மாத இறுதியில் நாட்டுக்கு எடுத்து வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
15.7 மில்லியன் சினோஃபார்ம் தடுப்பூசிகளை இலங்கை இதுவரை பெற்றுள்ளது. அவற்றில் 13.89 மில்லியன் தடுப்பூசிகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1