Pagetamil
லைவ் ஸ்டைல்

தாம்பத்தியம் இல்லாத வாழ்க்கை மகிழ்ச்சியை கொடுக்குமா?

மூடிய படுக்கையறைக்கு பின்னால் கணவன் மனைவிக்குள் நடக்கும் விஷயங்கள் ஓவ்வொருவருக்கும் மாறுபடலாம். நாளடைவில் இவர்கள் இருவருக்கு இடையில் இருக்கும் உறவுகள் ஆரோக்கியமாகவும் அன்பாகவும் அந்நியோன்யமாகவும் இருக்கலாம். அல்லது உறவு இல்லாத வாழ்க்கையையும் மேற்கொள்ளலாம். பாலினமற்ற உறவை எப்படி அணுகுவது என்று பார்க்கலாம்.

சில தம்பதியர் காலப்போக்கில் நெருக்கமானவர்களாக ஆகிறார்கள். சில தம்பதியர் ஆரம்பத்தில் இருந்தே குறைவான உடலுறவு கொண்டிருக்கிறார்கள். இதனால் உங்களுக்குள் ஒருவர் வெளியேறவும் விரும்பலாம். இதை தவிர்க்க உறவை மகிழ்வாக புதுப்பித்துகொள்ள பல வழிகள் உள்ளன. நீங்கள் விரும்பும் அளவுக்கு உடலுறவு கொள்ளாதது ஏன் என்பதை புரிந்து கொள்ள உறவு குறித்த விழிப்புணர்வை முதலில் பெறுவது அவசியம்.

​பாலினமற்ற உறவு ஏன்?

தம்பதியருக்கு குறைவான நெருக்கமாக இருப்பது சாதாரணமானது தான். ஆனால் இது நீடிக்காமல் பார்த்துகொள்ள வேண்டும். காலப்போக்கில் இந்த சரிவை சரி செய்து விட வேண்டும். பாலினமற்ற உறவு தான் ஆரோக்கியமானது என்று நீங்கள் யோசித்தால் அதற்கு காரணமும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் உறவை பல்வேறு கோணங்களில் ஆராயுங்கள். இல்லையெனில் நீங்கள் உங்கள் துணையுடன் சிக்கலை சந்திக்கும் போது இந்த தூரம் அதிகரிப்பதை உணர்வீர்கள். பெரும்பாலும் குழந்தை, நோய் போன்றவை பாலியல் வாழ்க்கையில் தடங்கலை உண்டு செய்யலாம். ஆனால் இவை எல்லாமே தற்காலிகமானதாக இருக்கும்.

பாலினமற்ற உறவுக்கு ஈர்ப்பு குறைதலும் காரணமா?

பாலினமற்ற உறவு வெவ்வேறு வடிவங்களில் வரலாம். ஒருவர் இன்னொருவர் மீது கொண்டுள்ள ஈர்ப்பு குறைவது, அல்லது அவருக்கு வேறு ஒருவர் மீது ஈர்ப்பு உண்டாவது இதனாலும் பாலின உறவை விரும்பமாட்டார்கள். பொதுவாக எதிர்தரப்பு குறித்த இந்த புகாரில் அவர்கள் சொல்வது துணையின் எடை அதிகரிப்பு, அவர்கள் விரும்பும் பாலுறவில் ஈடுபட விருப்பமின்மை போன்றவை தான். இந்த நேரத்தில் அவர்கள் மனதில் கொள்ள வேண்டியது அவர்களது அன்பு தொடங்கிய தருணம் தான்.

சில தம்பதியர் பாலுறவை காதலின் முக்கிய அங்கமாக கருதாதவர்களும் உண்டு. ஆனால் இவர்களை காட்டிலும் சிலர் துணைக்கு துரோகம் இழக்கும் போது அவர்கள் நம்பிக்கையை இழக்கிறார்கள். முறிந்த இந்த நம்பிக்கை மீண்டும் முன்னோக்கி நெருக்கமாக இருக்க வேண்டும் என்னும் அடிப்படையையே உடைக்கும் அளவுக்கு போகலாம்.

​தம்பதியருக்குள் உடலுறவு ஏன் முக்கியம்?

உடலுறவை உடல் நலன்களுக்காக விரும்பினாலும் அது உணர்வு பூர்வமாக இணையும் முக்கிய உறவு ஆகும். உறவு என்பது எவ்வளவு ஆரோக்கியமானது என்பதை பற்றி தங்கள் துணையுடன் உடலுறவின் விருப்பத்தையும் எதிர்பார்க்கிறார்கள். துணையுடன் நெருக்கமாக இருப்பதன் மூலம் வரும் தனித்துவமான உணர்ச்சி பிணைப்பை பலப்படுத்த முடியும். எத்தனை முறை உடலுறவு கொள்கிறோம் என்பது மகிழ்ச்சி அளிக்காது. உள்ளத்தில் இருந்து வரும் உண்மையான அன்பின் வெளிப்பாடே இருவருக்கும் அதிக மகிழ்ச்சி அளிக்கும். அது மாதம் ஒரு முறை இருந்தாலும், வருடம் ஒருமுறை இருந்தால் போதுமான திருப்தியான உறவாக இருந்தால் பிரச்சனை இல்லை. நீங்கள் எத்தனை முறை என்பதை காட்டிலும் மகிழ்ச்சியோடு உறவு கொள்ளும் போது மற்றவர்களுடன் உங்கள் தாம்பத்தியத்தை ஒப்பிட வேண்டியதில்லை.

தம்பதியர் இருவருக்குமே ஆசை இல்லாமல் போனால் இருவருக்குள்ளும் இருக்கும் பாலியல் ஆர்வம் குறைந்து வருவதற்கான அறிகுறியாக இருக்கலாம். இது பாலியல் உறவில் திருப்தியளிக்கவில்லை அல்லது நிறைவேறவில்லை என்பதற்கான அவர்களது புகாராகவே இருக்கலாம். அவர்கள் அதிகமாக பாலியல் அதிருப்தியை அனுபவிப்பார்கள். எப்போதும் பாலினமற்ற உறவில் தம்பதியர் சிக்க மாட்டார்கள். தேவையானதை பெறவில்லை எனில் உங்கள் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். இது ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கை சூழலை இருவருக்கும் அளிக்கும்.

​தாம்பத்தியத்தில் தனிநபருக்கு தேவையான மகிழ்ச்சி என்பது என்ன?

பாலினமற்ற உறவு தனி நபராக உங்களுக்கு என்ன தேவை என்பதை பொறுத்தது. உங்கள் துணை குறைந்த நெருக்கத்துடன் இருந்தாலும் உங்கள் பாலினம் குறித்து ஆசைகள் உங்களுக்கு இந்த உறவு எவ்வளவு முக்கியம் என்பது குறித்தும் நீங்கள் சுய மதிப்பீடு செய்ய வேண்டும். சிலருக்கு தாம்பத்திய உறவு என்பது முழுமையான தேவையாக இருக்கும். சிலருக்கு அரிதான விருப்பமாகவே இருக்கும். சிலர் தங்கள் துணையுடன் வெற்றிகரமான உணர்வு பூர்வமான தொடர்பை கொண்டிருப்பது இருவருக்கும் நீடித்த இணைப்பை தக்க வைக்க உதவும். சில தம்பதியர் தங்கள் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்ய வெளிப்படையான தாம்பத்திய முறையை தேர்வு செய்வார்கள். அதோடு இருவருமே உணர்வு பூர்வமாக உறுதியுடன் இருப்பார்கள்.

உறவுகளுக்குள் தாம்பத்தியம் என்று வரும் போது சரியானதை தீர்மானிக்க வேண்டும் என்பதே முக்கிய அம்சமாகும். இது தனிப்பட்ட முறையில் இருவரும் உடலுறவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பொறுத்தது. பாலினமற்ற உறவில் மகிழ்ச்சியற்றவராக இருந்தால் உங்கள் துணையுடன் உணர்வுகளை வெளிப்படுத்த துணையுடன் வெளிப்படையாக பேசுங்கள். உறவுகள் சிக்கலாகவே இருந்தால் இது குறித்து நிபுணரிடம் ஆலோசனை பெறுவதன் மூலம் தாம்பத்தியம் சிறக்கும்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment