வவுனியா, செட்டிகுளம் பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரிக்கு கோவிட் தொற்று நோய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
செட்டிகுளம் பிரதேசத்தில் கடந்த சிலநாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது.
இந்நிலையில் குறித்த அதிகாரியின் வாகன சாரதிக்கு கடந்த 19 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் குறித்த வைத்தியரும் பிசிஆர் பரிசோதனையினை முன்னெடுத்திருந்தார்,
இதன்போது அவருக்கு கோவிட் தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டது.இதனையடுத்து அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1