அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் தலைவர் வில்லியம் பர்ன்ஸ், காபூலில் தலிபானின் இணை நிறுவனர் முல்லா அப்துல் கனி பரதருடன் இரகசிய சந்திப்பு நடத்தியதாக வோஷிங்டன் போஸ்ட் மற்றும் அசோசியேட்டட் பிரஸ் ஆகியன செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகள் நடந்த கொண்டிருக்கும் சூழலில், நேற்று திங்கள் கிழமை தலிபான் குழு மற்றும் பிடென் நிர்வாகத்திற்கு இடையேயான மிக உயர் மட்ட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
பர்ன்ஸ் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் மிகவும் அனுபவம் வாய்ந்த இராஜதந்திரிகளில் ஒருவர். கத்தாரில் தலிபான்களின் அரசியல் அலுவலகத்திற்கு தலைமை வகித்த பரதர், தலிபான்களின் முக்கிய தலைவர்களில் ஒருவர்.
எனினும், சிஐஏ இந்த சந்திப்பை உறுதி செய்ய மறுத்து விட்டது. “இயக்குநரின் பயணங்களைப் பற்றி சி.ஐ.ஏ ஒருபோதும் விவாதிக்காது” என்று தகவல் வழங்க மறுத்து விட்டது.