நாவல, ஜனாதிபதி பெண்கள் கல்லூரியில் கல்வி கற்கும் 12 வயது சிறுமி ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தார்.
அபிமணி நவோதயா சேரசுந்தர என்ற தரம் 7ஐ சேர்ந்த மாணவியே உயிரிழந்தார்.
ராஜகிரிய கல்போட்ட வீதியில் வசிக்கும் அந்த சிறுமி, கடந்த வாரம் சிறு நோயால் பாதிக்கப்பட்டார். பின்னர் சுவாசக் கோளாறாக வளர்ந்தது.
கடந்த சனிக்கிழமையன்று அவர் கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, பிசிஆர் பரிசோதனையில் சிறுமிக்கு கோவிட் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நேற்று சிறுமி உயிரிழந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1