ஜெர்மனியில் உணவு டெலிவரி வேலையில் ஈடுபடும் ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர்!

Date:

ஆப்கானிஸ்தானின் முன்னாள் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் சையத் அகமத், உணவு டெலிவரி செய்துவரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

ஆப்கானிஸ்தானின் முன்னாள் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் சையத் அகமத். ஜெர்மனியின் லீப்ஜிக் நகரில் அப்பகுதி வாசிகளுக்கு உணவுப் பொருட்களை டெலிவரி செய்து வருகிறார் என்பதை ஜெர்மனி ஊடகங்களும் உறுதி செய்துள்ளன.

டெலிவரிக்கான உணவுப்பொருட்களை ஏற்றிக்கொண்டு சையத் அகமத் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த சையத் அகமத், அதன்பின் ஜெர்மனியின் லீப்ஜிக் நகருக்குக் குடிபெயர்ந்தார்.

இதுகுறித்து சையத் அகமத் கூறும்போது, “நான் தற்போது எளிமையாக வாழ்கிறேன். மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறேன். நான் நிறைய பணிகளுக்கு முயற்சி செய்தேன். ஆனால், எனக்குக் கிடைக்கவில்லை. நான் பணிக்குச் செல்லும் பணத்தைச் சேமித்து ஜெர்மன் கற்று வருகிறேன். ஜெர்மன் டெலிகொம் துறையில் பணிக்குச் சேர்வதுதான் தற்போது என் இலக்காக உள்ளது” என்றார்.

தகவல் தொடர்புத் துறை அமைச்சராக சையத் அகமத் இருந்த காலத்தில், ஆப்கானில் கிராமப்புறப் பகுதிகளில் தொலைபேசி சேவையைக் விரிவுப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு தேசிய வைத்தியசாலை இயல்புக்கு திரும்பியது!

கொழும்பு தேசிய மருத்துவமனையில், பலத்த மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாகச்...

முன்னாள் காதலி இப்போது என்ன செய்கிறாள்? – தகவல் அறியும் சட்டத்தில் 1,886 கேள்விகள் கேட்ட இளைஞர்

விழுப்புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த சந்​தோஷ் (22) என்​பவர், கடந்த 2021-2024 ஆண்​டுகளில்...

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்