இந்தியாவின் அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல லிமிடெட் (APSEZ) கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் நிர்மாண பணிகளை ஆரம்பிப்பது உறுதியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்கு முனையத்தில் 20 அடி ஆழமான நவீன சரக்கு முனையமாக மாற்றும் இந்த ஒப்பந்தம் எதிர்வரும் நவம்பர் மாதம் கையெழுத்தாகவுள்ளது.
மேற்கு முனையத்தை நிர்மாணித்து, பராமரித்து, பரிமாற்ற 35 வருட கால ஒப்பந்தம் கைச்சாத்தாகவுள்ளது.
APSEZ, ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, இலங்கையின் மிகப்பெரிய பல்வகைப்பட்ட கூட்டமைப்பு மற்றும் இலங்கை துறைமுக ஆணையத்துடன் (எஸ்எல்பிஏ) கூட்டணியின் ஒரு பகுதியாக இந்த ஆணை வழங்கப்படுகிறது.
கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் நிர்மாணப்பணிகளை அதானி குழுமத்திற்கு வழங்குவதாயின் உள்நாட்டு பங்குதாரர்களும் இணைந்திருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். இதனால், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபை ஆகியவற்றையும் பங்குதாரர்களாக கொண்டு இந்த அபிவிருத்தி திட்டம் இடம்பெறவுள்ளது.
1400 மீட்டர் நீளம் மற்றும் 20 மீட்டர் ஆழத்துடன் அமைக்கப்படவுள்ள மேற்கு முனையம், அல்ட்ரா லார்ஜ் கன்டெய்னர்களையும் கையாளும் மையமாக மாறும்என எதிர்பார்க்கப்படுகிறது.