வவுனியாவில் கொரோனா தொற்றால் இருவர் இன்று உயிரிழந்துள்ளனர்.
வவுனியா மதவுவைத்தகுளம் கொரோனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிப்பிகுளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் இன்று உயிரிழந்தார்.
அவர் திடீர் சுகவீனமுற்றநிலையில் வவுனியா வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இதேவேளை கோவிட் தொற்று காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தோணிக்கல், சிவன்கோவில் வீதியைவ் சேர்ந்த 68 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்தார்.



