நல்ல ஒளிரும் சருமம் நல்ல ஆரோக்கியத்தின் அறிகுறியாகும். இதை எப்போதும் தக்க வைத்துகொள்ள வேண்டும். குறிப்பாக மாசு, சூரிய ஒளியால் சேதமாகும் சருமம், மோசமான உணவு போன்ற பல பிரச்சனைகளை சருமத்தை மேலும் மோசமாக்கும். சருமம் இயற்கையான பளபளப்பு மற்றும் அமைப்பு இழக்கவிடாமல் சரும சேதத்தை மாற்றி சருமத்தை பிரகாசமாக்கும் அருமையான வைத்தியம் நம்மிடம் உண்டு. அதை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
மந்தமான தோல் என்றால் என்ன?
தோல் நோயில் முக்கியமானது மந்தமான தோல். இது சருமத்தின் பிரகாசமான அல்லது பளபளப்பை இழக்க செய்கிறது. மந்தமான தோல் நிலை பார்க்க வயதான தோற்றத்தை எடுத்துகாட்டும். ஆரோக்கியமற்றதாக காட்டும். இது சீரற்ற தொனி அமைப்பை கொண்டிருகலாம். சருமத்தின் புள்ளிகள், கறைகள், மெல்லிய கோடுகள் சுருக்கங்கள் போன்றவை சருமத்தின் இயற்கையான பளபளப்பை இழந்து மந்தமான தோற்றத்தை ஏற்படுத்தும். மந்தமான தோல் என்பது முதுமையின் நேரடி விளைவு மட்டும் அல்ல. இது வேறு காரணங்களாலும் உண்டாகிறது.
மந்தமான சருமத்துக்கு காரணங்களும் அறிகுறிகளும்
மந்தமான சருமத்துக்கு காரணம் சரியான முறையில் சரும பராமரிப்பை மேற்கொள்ளாததே. புகை, தூசு மற்றும் மாசுபாடு போன்றவை இயற்கையான பளபளப்பை பாதிக்க செய்யும். இவைதான் முகப்பரு, பருக்கள் மற்றும் சீரற்ற சரும தொனி போன்ற சரும தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கும்.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வலுவாக இருக்கும். இந்த காலகட்டத்தில் யுவி கதிர்கள் அதிகமாக இருக்கும். இது சருமத்துக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை உண்டாக்கும். சன்ஸ்க்ரீன் பயன்படுத்தாமல் வெயிலில் இருப்பது மந்தமான சருமத்தை உண்டாக்கும்.
நல்ல சருமத்துக்கு நீரேற்றமாக இருப்பது அவசியம். இது சருமத்தை மிருதுவாகவும் ஈரப்பதமாகவும் வைக்க உதவுகிறது. நீரேற்றம் இல்லாததால் சருமம் மந்ததன்மையை எதிர்கொள்கிறது.
ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க சரியான சீரான உணவு அவசியம். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துகொள்வது உங்கள் சருமத்துக்கு பாதுகாப்பாக இருக்கும். ஆனால் நவீன வாழ்க்கை முறை உணவு பழக்கத்தை பாதிக்கிறது. இந்த உணவுகள் மந்தமான சருமத்துக்கு காரணங்களாகிறது.
மந்தமான தோல் என்பது வயதாவதாலும் உண்டாகலாம். உங்கள் சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் நுண் கோடுகள் உருவாகலாம். சீரற்ற தோல் நிறம் கறைகள் மற்றும் புள்ளிகளின் தோற்றம் சருமத்தின் இயற்கையான பளபளப்பு இழப்பு உண்டாகலாம். இதை குணப்படுத்த உதவும் வீட்டு வைத்தியம் என்ன என்பதை பார்க்கலாம்.
எலுமிச்சை
எலுமிச்சை விற்றமின் சி அல்லது அஸ்கார்பின் அமிலத்தின் வளமான ஆதாரமாகும். விற்றமின் சி ஆனது ஒரு நிறமி எதிர்ப்பு விளைவை கொண்டிருக்கிறது. இதன் மூலம் நிறத்தை மேம்படுத்தலாம். இது சருமத்தை பிரகாசமாகவும் வைத்திருக்கிறது.
எலுமிச்சை 1 அல்லது 2
பருத்தி துணி – சிறியது
எலுமிச்சை சாற்றை ஒரு பாத்திரத்தில் பிழிந்து விடவும். இந்த சாற்றில் நீர் விட்டு நீர்த்து பருத்தி உருண்டைகளை நனைத்து முகத்தில் தடவி விடவும். பிறகு 20 நிமிடங்கள் வைத்து முகத்தை வெற்றுநீரில் கழுவி விட வேண்டும். வாரத்தில் இரண்டு முறை இதை செய்ய வேண்டும்.
சர்க்கரை ஸ்க்ரப்
சர்க்கரை கொரகொரப்பு காரணமாக வறண்ட சருமம் மற்றும் இறந்த சரும செல்களை அகற்ற உதவும். இது சருமத்தை பொலிவாக மாற்ற உதவும்.
பழுப்பு சர்க்கரை – கால் கப்
ஆலிவ் எண்ணெய் 2 டீஸ்பூன்
தேன்-1 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெயில் தேன் சேர்த்து பிறகு சர்க்கரை கலந்து எடுக்கவும். இந்த கலவையை முகத்தில் வட்ட வடிவ இயக்கத்தில் தேய்க்கவும். 4-5 நிமிடங்களுக்கு பிறகு தண்ணீர் விட்டு சுத்தம் செய்யவும். வாரத்தில் இரண்டு முறை இதை செய்யலாம்.
தேன்
தேனில் பிரக்டோஸ் குளுக்கோஸ் மற்றும் ஆல்பா-ஹைட்ராக்ஸி அமிலங்கள் உள்ளன. இது அதிகப்படியான நிறமியை குறைக்க உதவும். இது சருமத்தை பிரகாசமாகவும் மென்மையாகவும் வைத்திருக்க செய்யும்.