டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் ரஷ்ய நீச்சல் வீராங்கனை அல்லா சிஸ்கினா. அவர் ஒலிம்பிக்கில் 3 தங்கம் வென்றுள்ளார். அண்மையில் வழங்கிய பேட்டியொன்றில், செக்ஸ்தான் தனது வெற்றியின் இரகசியம் என பரபரப்பை கிளப்பிள்ளார்.
ரஷ்யாவில் இருந்து வெளிவரும் ஸ்போர்ட் எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.
அவரது பேட்டியில்,
உடலுறவு கொள்வது என்பது அவரவர் விருப்பம். ஆனால் உடலுறவு கொள்வதன் மூலம் அதற்கான பலன் உங்களுக்கு கிடைக்கும் என்று நம்பினால் நீங்கள் அதை மேற்கொள்ளலாம். முக்கியமாக விளையாட்டு வீரர்களுக்கு உடலுறவு நல்ல பலனைக் கொடுக்கும். உடலுறவின் மூலம் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் செயல்பாடுகள் அதிகரிக்கிறது. இதனால் விளையாட்டு வீரர்களின் தேவையற்ற ஆக்ரோசம் கட்டுப்படுத்தப்படுகிறது. அப்படி கட்டுப்படுத்தப் படுவதால் அவர்களின் வெற்றிக்கு வழிவகுக்கிறது.
தசை வலிமையை மட்டுமே நம்பி விளையாடப்படும் போட்டிகளுக்கு விளையாட்டு வீரர்கள் முழுவதும் உச்சம் தொடாத உறவை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் போட்டியில் நல்ல முடிவு அவர்களுக்கு கிடைக்கும்.
நான் பொதுவாகவே மருத்துவ ஆராய்ச்சிகளை பெரிதும் நம்புவேன். அப்படித்தான் என் மருத்துவர்களிடம் கலந்து ஆலோசித்த போது, உடலின் அதிக சக்திக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபோது, உடலுக்கு அதிக சக்தி கிடைக்க வேண்டுமென்றால் நீங்கள் உடலுறவு கொள்ள வேண்டும் என்றனர்.
பலர் நினைக்கிறார்கள் பெரிய மார்பகமுள்ளது நீச்சலிற்கு சாதகமானது என. அவை மிதக்க வைக்கும் என நினைக்கிறார்கள். அது தவறானது. நீங்கள் மற்றைய விளையாட்டுக்களை போலவே நீச்சலில் சாதிக்கவும் தட்டையான மார்புகளே தேவை என்றார்.