27.6 C
Jaffna
April 15, 2025
Pagetamil
லைவ் ஸ்டைல்

அடர்த்தியான கூந்தலுக்கு பயோட்டின் ரொம்ப அவசியம்!

முடி வளர்ச்சிக்கும் முடி உதிர்தலுக்கும் முற்றுபுள்ளி பயோட்டின் என்று சொல்லலாம். கூந்தலின் அழகை மேன்மேலும் வளர்த்துகொள்ள விரும்பினால் உங்கள் உணவில் இந்த பயோட்டின் நிறைந்த உணவுகளை அன்றாடம் சேர்த்துகொள்ளுங்கள். பயோட்டின் நிறைந்த உணவுகள் உங்கள் ஆரோக்கியமான கூந்தலுக்கு பெரிதும் உதவும்.

​கூந்தலுக்கு ஏன் பயோட்டின் அவசியம்

தலைமுடியின் ஆரோக்கியத்தை தீர்மானிக்க பல காரணிகள் உள்ளன. அதில் உணவு பெரிய பங்கேற்பாளர் என்றே சொல்லலாம். உடலை போலவே தலைமுடியும் ஆரோக்கியமாகவும் ஊட்டச்சத்து நிறைந்தும் இருக்க வேண்டும். ஏனெனில் முடி வளர்ச்சிக்கு புரதங்கள், கல்சியம் மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்று.

கூந்தல் மற்றும் சருமத்துக்கு வேண்டிய ஆலோசனைக்கு சரும மருத்துவரை அணுகினால் பயோட்டின் உட்கொள்ளலை அதிகரிக்க பரிந்துரைப்பார்கள். பயோட்டின் என்பது வைட்டமின் பி ஆகும். இந்த உணவு உட்கொண்ட பிறகு ஆற்றலாக மாறும். இது நீரில் கரையக்கூடிய விற்றமின் என்பதால் அதை உடலில் தக்கவைப்பது கடினமாக இருக்கும். எனினும் உடலுக்கு தொடர்ந்து பயோட்டின் அவசியம்.

​பயோட்டின் சப்ளிமெண்ட்கள் உதவுமா

மருத்துவர்கள் ஆலோசனைக்கு பிறகு தேவையெனில் அவர்களே பயோட்டின் மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள். ஆனால் இயற்கையாக உணவு வழியாகவே அதை பெறும் போது பலன் அதிகமாகவே கிடைக்கும். இந்த பயோட்டின் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துகொள்வதன் மூலம் கூந்தல் அழகாக வளர உதவும். உங்கள் கூந்தலின் அழகை பாதுகாக்கவும் பராமரிக்கவும் நீங்கள் உணவில் தினசரி பயோட்டின் சேர்த்துக்கொள்ளுங்கள்.

​பால் பொருள்கள்

பால் பொருள்கள், பாலாடைக்கட்டி, தயிர் அனைத்திலும் நல்ல அளவு பயோட்டின் உள்ளது. உடல் ஆரோக்கியம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்துக்கு இந்த உணவுகளை தினசரி எடுத்துகொள்ள வேண்டும்.

கீரைகள்

கீரை என்பது புரதம் மற்றும் இரும்பின் சக்தி நிறைந்த முக்கியமான பொருள். இவை அவசியம் உடல் ஆரோக்கியத்துக்கும் கூந்தல் அழகுக்கும் தேவை. இந்த பச்சை இலை காய்கறிகள் பயோட்டின் சிறந்த ஆதாரம் ஆஆகும்க்ஷ. உணவில் பாலக்கீரை, பருப்புக்கீரை, முளைக்க்கீரை, முருங்கைக்கீரை என பல கீரைகளோடு பச்சை இலை காய்கறிகளையும் தட்டு நிறைய எடுத்துகொள்ளுங்கள்.

முட்டை

முட்டையின் வெள்ளை கருவை எடுத்துகொண்டு முட்டையின் மஞ்சள் கருவை நீங்கள் தவிர்த்தால் அது உங்கள் கூந்தலுக்கு எந்தவிதமான நன்மையும் அளிக்காது. முட்டையோடு நீங்கள் மஞ்சள் கருவையும் சேர்த்து எடுத்தால் உங்கள் முடி ஆரோக்கியம் பெறும். புரதம் மற்றும் பயோட்டின் உள்ளிட்ட பல முக்கியமான சத்துக்கள் அதில் உள்ளன. சர்வதேச உணவு தகவல் கவுன்சில் அறக்கட்டளையின் தரவுகளின் படி, மஞ்சள் கரு உட்பட முழு முட்டையும் 10 எம்.சி.ஜி பயோடின் வழங்குகிறது.

​கொட்டைகள்

கொட்டைகள் மற்றும் விதைகளின் முக்கியத்துவத்தை பல முறை படித்திருக்கிறோம். பல ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கிய இது முடியின் ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகின்றன. பாதாம், அக்ரூட் பருப்புகள், வேர்க்கடலை, சூரியகாந்தி விதைகளை உங்கள் சாலட்கள் மிருதுவாக்கிகள் மற்றும் இனிப்புகளில் சேர்க்கவும். அப்படியேவும் வெறுமனே வாயில் போட்டு சாப்பிடலாம். இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் சால்மன் மீன் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பயோட்டின் நிறைந்துள்ளது. சால்மன் ஒட்டுமொத்த நல்வாழ்வு மற்றும் அழகான நீண்ட கூந்தலுக்கு பல பண்புகளை அளிக்கிறது.

 

இதையும் படியுங்கள்

சமையல் குறிப்புக்கள் – கோவா வடை

Pagetamil

திருகோணமலை ஸ்பெஷல் மாமைற் முறுக்கு

Pagetamil

மட்டக்களப்பு மரக்கறி கூட்டுக்கறி

Pagetamil

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!