கலக்கப்போவது யாரு மூலம் அதிகம் பாப்புலர் ஆனவர் சரத். தீனா உள்ளிட்ட மற்ற காமெடியன்களுடன் சேர்ந்து அவர்செய்த காமெடி ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.
விஜய் டிவியின் காமெடி குக்கிங் நிகழ்ச்சியான குக் வித் கோமாளியிலும் சரத் பங்கேற்று இருந்தார். கோமாளியாக அவர் சிறப்பாகவே அதிலும் காமெடி செய்துள்ளார். இதை தொடர்ந்து அவர் மனைவி கிரித்திகாவுடன் சேர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
சமீபத்தில் சரத் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை போட்டார். அவரும் மனைவி கிரித்திகாவும் புது கார் முன்பு நின்றுகொண்டு இருக்கின்றனர். மனைவியின் அன்பான பரிசு என சரத் குறிப்பிட உள்ளதால், அவர் மனைவி தான் கார் வாங்கி அவருக்கு பரிசளித்து உள்ளார்ந்த என தெரிகிறது.
ஏற்கனவே குக் வித் கோமாளி புகழ் கார் வாங்குவதற்கு அதிக வாழ்த்துக்கள் குவிந்தது, தற்போது சரத் புது கார் வாங்கி இருப்பதற்கும் நெட்டிசன்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.