மயிலிட்டி கடற்பரப்பில் 168 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையின் போது, நேற்று இரவு இந்த கடத்தல் முறியடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் மூவரும் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று, சிலாவத்துறை மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.



