25.5 C
Jaffna
December 23, 2024
Pagetamil
மலையகம்

பஸ் – டிப்பர் மோதல்!

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை அட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள பகுதியில் இன்று (20) காலை 7 மணியளவில் பஸ் ஒன்றும், டிப்பர் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா பகுதியிலிருந்து ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு ஊழியர்களை ஏற்ற தலவாக்கலை சென்.கிளயார் பகுதியை நோக்கி சென்ற பஸ் ஒன்றும் அட்டன் பகுதியில் இருந்து நுவரெலியா பகுதிக்கு சென்ற டிப்பர் வாகனம் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் டிப்பர் சாரதியும், பஸ் சாரதியும் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து காரணமாக சுமார் 30 நிமிடங்கள் அட்டன் – நுவரெலியா வீதி ஊடான போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகின.

குறித்த கனரக வாகன சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாது போனதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளன.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

க.கிஷாந்தன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நானுஓயாவில் வீதியைவிட்டு விலகிய லொறி மண்மேட்டில் மோதி விபத்து

east tamil

ஹட்டனில் பஸ் விபத்தில் 3 பேர் பலி

east tamil

தலை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சிறுத்தையின் உடல்

east tamil

விபத்தையடுத்து இ.போ.ச சாரதி, நடத்துனரை தாக்கிய கும்பல்

Pagetamil

தந்தையின் முன்பாக விபத்தில் பலியான மாணவி

Pagetamil

Leave a Comment