அமெரிக்க காங்கிரஸ் நூலகம், உயர்நீதிமன்ற கட்டிடங்கள் உள்ள பகுதிக்கு அருகே கனரக வாகனம் ஒன்றில் வெடிபொருளை வைத்திருப்பதாகக் கூறி மிரட்டல் விடுத்த ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று நடந்த அந்தச் சம்பவத்தால் 5 மணி நேரத்திற்கு மேலாக வோஷிங்டன் வெலவெலத்தது.
காலை 9.15 மணியளவில் ஃபிலாய்ட் ரே ரோஸ்பெர்ரி என்னும் 49 வயது ஆண், வெடிபொருள் நிரப்பிய கனரக வாகனத்தை அரசாங்கக் கட்டடம் அருகே நிறுத்திவிட்டுக் காத்திருப்பதாகக் பொலிசாரை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார், அந்த நபர் கையில் ஏதோவொரு பொருளுடன் நின்றதை அதிகாரிகள் கண்டனர்.
அதைத்தொடர்ந்து அந்தச் வீதிகள் மூடப்பட்டன. சுற்றியுள்ள கட்டடங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அந்த வெடிகுண்டு மனிதருடன் பொலிசார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர் சரணடைந்தார்.
வாகனத்தில் வெடிபொருள் எதுவும் இருக்கவில்லை.ஆனால் சாத்தியமான வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்கள் வாகனத்தில் இருந்து சேகரிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
விசாரணை தொடர்கிறது.