மைனா நந்தினிக்கு எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் கொடுத்த கணவர்
விஜய் டிவியின் பல்வேறு சீரியல்களில் நடித்து பாப்புலர் ஆன நடிகையாக இருந்து வருகிறார் மைனா நந்தினி. சரவணன் மீனாட்சி தொடரில் கிராமத்து பெண் மைனா ரோலில் ரசிகர்களை கவர்ந்த அவருக்கு ரசிகர்களும் அதிகம் இருக்கிறார்கள்.
அவர் நடிகர் யோகேஸ்வரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மைனாவின் முதல் திருமணத்தில் பல்வேறு சர்ச்சைகள் இருந்த நிலையில் முதல் கணவர் தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் தான் மைனா இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
மைனா நந்தினி தற்போது கணவர் யோகேஸ்வர் உடன் சேர்ந்து மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் மைனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக கணவர் யோகேஷ் ஒரு விஷயத்தை செய்து இருக்கிறார். மைனாவின் முகத்தை அப்படியே நெஞ்சில் பச்சை குத்திக்கொண்டிருக்கிறார் அவர். அதை பார்த்து மைனாவும் ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார். அவரே இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு கூறியிருப்பதாவது..
“நான் கொஞ்சம் கூட எதிர் பாக்காத சர்ப்ரைஸ். உன்னுடன் unconditional love எப்போதும். நன்றி சொல்ல கூடாது ஆனால் சொல்லணும்னு தோனுது. நன்றி பாப்பா. நமக்கு ஒரு பொண்ணு இருந்தா உன்ன மாதிரி தான் கணவர் இருங்கனும்னு கடவுளை வேண்டுக்குறேன்” என மைனா கூறி உள்ளார்.