கழுத்தில் தாலியுடன் வனிதா: மறுபடியும் முதலில் இருந்தா ரசிகர்கள் கிண்டல்

Date:

கோலிவுட்டின் பிசியான நடிகைகளில் ஒருவராகிவிட்டார் வனிதா விஜயகுமார். அவ்வப்போது அவர் புதுப்படம் குறித்து அறிவிக்கும்போது அக்கா, லிஸ்ட்டு ரொம்ப பெருசா போகுது என்கிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் கழுத்தில் புது தாலியுடன் செல்ஃபி எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ஆனால் இம்முறை ஒரு வித்தியாசம். அதாவது பிக்கப் டிராப் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படம் என்பதை தெளிவாக கூறியுள்ளார் வனிதா.
இதில் என்ன குழப்பம் என்கிறீர்களா?. முன்னதாக பிக்கப் டிராப் படத்திற்காக பவர் ஸ்டாருடன் திருமணக்கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை எதுவும் கூறாமல் சமூக வலைதளத்தில் வெளியிட்டார் வனிதா. அதை பார்த்தவர்களோ, பவர் ஸ்டார் தான் உங்களின் 4வது கணவரா என்று கேட்டார்கள்.

அமைதியாக இருந்த வனிதா பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அந்த புகைப்படம் குறித்து விளக்கம் அளித்தார். ஆனால் இம்முறையோ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டதை தெளிவுபடுத்திவிட்டார்.
வனிதாவின் புகைப்படத்தை பார்த்த ஆதரவாளர்களோ, அக்கா நாளுக்கு நாள் அழகாகிக் கொண்டே இருக்கிறீர்கள், கண்ணு படப் போகுது, சுத்திப் போடுங்க என தெரிவித்துள்ளனர். சமூக வலைதளவாசிகளோ, மறுபடியும் முதலில் இருந்தா? இன்னும் எத்தனை முறை திருமணம் செய்வீர்கள், உங்களுக்கு போர் அடிக்காதா என்று கிண்டலாக கேட்டிருக்கிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் சட்ட விரோத மதுபானம் போதைப்பொருள் விற்பனை ஒழித்து தருமாறு கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் (சுவிஸ் கிராமம்)  நீண்டகாலமாக  பொலிசாரின் ஆதரவுடன் சட்டவிரோத...

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் வீதி ஊர்வலம்!

ஒக்டோபர் 9 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்